ரயில் பயணங்கள் 2

90 களின் ஆரம்பத்தில் ரயிலில் பயணிக்க ஆரம்பித்தேன். எங்கள் ஊருக்கு ரயில் நிலையம் வந்து நான்கைந்து வருடங்கள் ஆகியிருந்தது. ரயில்கள் நிற்க துவங்கியதால் தான் ஆறாம் வகுப்பு படிக்க ஆவடியில் உள்ள பெண்கள் பள்ளியில் சேர்த்தார்கள். பள்ளியில் சேர்ந்து ஒரு வருடம் கடந்து இருந்தது. காலையில் 7.50 க்கும் சாயங்காலம் 4.20 க்கும் வண்டி பிடிப்போம். இரண்டுமே கூட்டத்திற்கு குறையில்லாமல் நிறைந்து வழியும். மகளிர் பெட்டியில் எங்களது கனத்த பைகளுடன் நாங்கள் வாங்காத திட்டுக்களே இல்லை. நெரிசலில் நசுங்கிக் கொண்டே திட்டுக்களை துடைத்தெரிந்துவிட்டு அரட்டை அடித்துக் கொண்டே சந்தோஷமாய் பயணித்து வந்தோம்.

இந்நிலையில் தான் ரயில்வே நிர்வாகம் ஒரு ஆய்வு நடத்தி மாபெரும் உண்மை ஒன்றை கண்டறிந்தது. அது வேப்பம்பட்டு போன்ற சிறிய ரயில் நிலையங்களில் எல்லா ரயில்களும் நிற்க வேண்டாம் என்பது.

ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த எனக்கும் என் தோழியருக்கும் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை. சில நாட்கள் ரயில் பிடித்து பள்ளிக்கு செல்ல தாமதம் ஆனது. பள்ளியில் ஓரிரு நாட்கள் அனுமதித்தார்கள். நேரத்திற்கு வந்தே தீர வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட போது பள்ளிக்கு தாமதம் ஆகிவிட்டது என்று வீடு திரும்பினோம். மாலை வேளையில் ரயில்கள் நிற்காத போது அடுத்த ரயில் நிலையத்திற்கு சென்று வந்தோம். இதனால் அலைச்சல் இருந்தாலும் உள்ளூர மகிழ்ச்சிதான். இந்த பயணங்களை ஒரு சாகசமாகவே எடுத்துக் கொண்டோம்.

ஆனால் உண்மையில் பாதிக்கப்பட்டது எங்கள் ஊருக்கு புதிதாய் குடிவந்தவர்கள் தான். 90 களில் எங்கள் ஊரின் விளை நிலங்கள் வீட்டுமணைகளாக மாற்றப்பட்டு வெளியிடங்களில் இருந்து மக்கள் எங்கள் ஊரில் வீடுகள் வாங்கி குடியேறினார்கள். இவர்கள் பெரும்பாலும் நகர் புறத்தில் வேலை செய்பவர்கள். தினசரி சென்னைக்கு சென்று வருபவர்கள். இவர்கள் நிமித்தம் அமைக்கப்பட்டது தான் வேப்பம்பட்டு ரயில் நிலையம்.

1994 இல் ரயில்வே நிர்வாகம் எடுத்த முட்டாள் தனமான முடிவினால் சீறி எழுந்த இந்த மக்கள் ஒரு நாள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அது ஒரு திங்கட்கிழமை என்று நினைக்கிறேன். மறியலில் ஈடுபட்ட மக்களை தடியடி நடத்தி கலைத்தது போலீஸ். அதோடு நின்றுவிடாமல் சேரிக்குள் நுழைந்து வீட்டிலிருந்தோரை தாக்கி கைது செய்தது. அது ஒரு வேலை நாள் என்பதால் இளவயது ஆண்கள் வீட்டில் இல்லை. சற்று சுதாரித்துக் கொண்டவர்கள் தப்பிவிட, மாட்டிக்கொண்டவர்கள் பரம சாதுக்கள். அதில் என் பெரியப்பாவும் ஒருவர்.

கைதான என் பெரியப்பா உள்ளிட்ட ஒரு பாதியினர் திருவள்ளூர் சப் ஜெயிலிலும் மற்றொரு பாதியினர் சென்னையிலும் 15 நாட்கள் ரிமாண்டில் வைக்கப் பட்டு பின்னர் விடுவிக்க பட்டனர். நான் மற்றும் என் குடும்பத்தார் அனைவரும் ஜெயிலுக்கு சென்று அழுது கொண்டே பெரியப்பாவை பார்த்து வந்தோம். இதில் பியூட்டி என்னவென்றால் மறியலில் ஈடுபட்ட எவரும் கைது செய்யப்படவில்லை.

சேரிக்குள் நுழைந்த போலீஸ் அனைவருக்கும் ஊரில் ஒரு முக்கிய பிரமுகரின் வீட்டில் விருந்தளித்து உபசரிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் ரயில் என்பது எவ்வளவு பெரிய விடுதலையை தர கூடியது என்பது நாங்கள் மட்டுமே அறிந்தது. ரயில் கஞ்சிப் படிக்கி வேலை செய்த எங்கள் உழைப்பாளிகளை மாத சம்பளத்திற்கு வேலைக்கு கூட்டிச் சென்றது. தினசரி பத்து கிலோமீட்டர் நடந்தாலும் பண்ணிரண்டாம் வகுப்பிற்கு மேல் படிக்க கல்வி நிறுவனங்கள் இல்லாமல் முடங்கிப்போன எங்களது மாணவர்களை மேற்படிப்பிற்கு அழைத்துச்சென்றது.

pepsi-plant-protests-240-tamil-nadu_240x180_81445962406ரயிலை வெறும் ஒரு போக்குவரத்தாக மட்டும் எங்களால் பார்க்க முடியாது. அவர்களாலும் தான். அதனால் தான் எங்கோ நின்ற போலீஸ் எங்கள் ஊருக்குள் நுழைந்தது.

Advertisements

ரயில் பயணங்கள்

18813574_1649192148424870_800121592530974247_nஇன்னும் சில மணி நேரங்களில் மும்பை பயணம் தொடங்க போகிறது. ரயிலில் பயணம் செய்த காலங்களை நினைக்கும் போது இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் சந்தித்த பெண் மனதில் வந்து போகிறார். அவர் சில வருடங்களுக்கு முன்பு எனக்கு அறிமுகமாகி இருந்தார்.  வீட்டிற்க்கு ஒரே பெண். செல்வச் செழிப்பான குடும்பம். சிறு வயதிலேயே திருமணமானவர். 5 வயதில் அழகான ஒரு மகன் உண்டு. மிகவும் துடிப்பானவர். வேகமாக கார் ஓட்டுவது அவருக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு அப்படியே எதிர்மறை என்று வைத்துக்கொள்ளலாம். அப்படித்தான் எனக்கு எதிர்மறையான ஒரு கருத்தை உதிர்த்தார். “எனக்கு டெரைன் ல டிராவல் பண்ரதே பிடிக்காது…” அவருடனான உரையாடலில் இந்த வரிகள் மட்டும் நெஞ்சில் கொக்கியிட்டு நின்றுவிட்டது.

சர்றென்று கோபம் தலைக்கு ஏரினாலும் அமைதி காத்து “அது அப்படிதாங்க சில பேருக்கு… ” என்று மட்டும் சொல்லி வைத்தேன் ( மனதில் தோன்றுவதை எல்லாம் பேசவா முடிகிறது!) ஆனாலும் அந்த வரிகளை அப்படி கடந்து போக முடியவில்லை. ஏனென்றால் ரயிலுக்கும் எனக்குமான தொடர்பு அப்படி பட்டது. என் வாழ்வில் கனிசமான நேரத்தை ரயிலில் கழித்திருக்கிறேன். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் எனது பத்தாவது வயதில் ஆரம்பித்து இன்று வரை அது தொடர்கிறது. முற்றுப் பெரும் சாத்தியமும் இல்லை. ஆரம்பத்தில் அறை மணி நேரமாக துவங்கிய பயணம் இப்போது சில நேரங்களில் மூன்று மணி நேரமாக கூட நீண்டு போகிறது. உலக அனுபவத்தை நான் ரயில் பயணங்களில் தான் பெற்றேன். அது எனக்கு காட்டிய மனிதர்கள் என்னுள் நீங்கா இடம் பிடித்துள்ளனர். ரயிலில் இசைத்து கேட்ட திரை பாடல்கள் ஆகட்டும், உணவிலிருந்து ஒப்பனை வரை ரயிலில் முடிக்கும் பெண்களாகட்டும் ரயில் பயணம் தரும் அனுபவம் தனி ரகம். உண்டி உறைவிடம் தேடும் கண்கள் முதல் மிரட்சி, குருகுருப்பு, ஏளனம் என எத்தனை எத்தனை ரசங்கள். அட சூப்பர்ங்க என அசத்திய மனிதர்கள் ஏராளம். இப்படி என்னை அசத்தியவர் வரிசையில் முதல் இடம் பிடிப்பவர் ஒரு பதின்மவயதுப் பெண். அவர் ஒரு நரிகுறவப் பெண் வியாபாரி.

ஒரு ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அதிகமில்லாத மகளிர் பெட்டியில் அவர் முத்து மாலை விற்பனை செய்த முறையில் எவ்வளவு பெரிய மார்கெட்டிங் எக்சிகியூட்விவாக இருந்தாலும் அவரிடம் ஒரு நாள் பாடம் கற்க வேண்டும் என்று எண்ண வைத்து விட்டார். அவரை பார்த்த மாத்திரத்தில் என் பொது புத்தி முகத்தில் அறைந்து கூறியது “இது ஒரு தொம்ம”. நரிக்குறவர பெண்களுக்கு உரித்தான காந்த கண்கள், பெருத்த உதடு எல்லாம் மிஸ்ஸிங். கட்டையான உடல்வாகு, மிக மிக சாதாரணமான கண்கள். வயது 15 ஐ கடந்திருக்காது. இடது கை நிறைய ஒரு 50 மணிகளை தொங்கவிட்டிருந்தார். இடது தோலில் இருந்து குறுக்காக வலது இடையில் முடிச்சு போட்டு முடிந்த அறை தாவணியில் குழந்தையை பாதுகாப்பது போல் மேலும் மணிகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தார். பெட்டியில் இருந்த சொற்ப பெண்கள் அனைவரும் மணியை வேடிக்கை பார்த்தோம். என் பக்கத்திலிருந்த ஐவர் குழு மிக உற்சாகமாகி சிறுமியை அழைத்து விலை கேட்டது.

அவர் முத்து மாலைக்கு சொன்ன விலை ரூபாய் 80…(நம்மை போன்ற அதீத(அனுபவ)அறிவுள்ளவர்களுக்கு தெரியும் அது வெறும் 20 ரூபாய் என்று). விலை கேட்ட பெண்கள் மட்டும் என்ன சளைத்தவர்களா? பேரம் பேசுவதில் பி.எச்.டி பட்டம் பெற்றவர்கள். ஒரே நொடியில் வேண்டாமென்று மறுத்துவிட்டனர்.

இப்போது சிறுமி கூறினாள், “எவ்ளோ தருவே சொல்லு அக்கா. கொறச்சி தரறேன்.”

இப்போது பெண்கள் முறை. ஒரேபோடாய் போட்டார்கள் 20 ரூபாய்.

இன்னா யக்கா இப்டி கேக்கற 80 எங்க 20 எங்க? என்று நியாயம் கேட்டார் சிறுமி.

“அது வெல அவ்ளதான்…குடுக்கற்துன்னா குடு” என்று பேச்சை துண்டித்தனர் பெண்டீர்.

“நீ சொல்ற மணி இது இல்ல. அது தோலு உரிஞ்சி போவும்…இத நீ வெண்ணீர்ல போடு ஒன்னும் ஆவாது” என்று மணியின் அருமை பெருமைகளை விளக்கினார்.

பெண்கள் மத்தியில் எந்த சலனமும் இல்லை. சிறுமி தன் உத்தியை மாற்றினார். “எத்தினி மால வாங்க போற?” மூன்று என்றனர் பெண்கள். “சரி உனக்கொசம் 50 ரூபாய்க்கு தரேன்.” மௌனம். அக்கா நான் ஓல்சேல்ல வாங்கல… நானே பொருளு வாங்கி செய்யற்து. பொருளு டாமேஜ் போவ மீதி ஒரு லாபமும் கெடயாது. ஒரு மணி வித்தா 2 ரூபா தான் கெடைக்கும். 30 ரூபா கொரச்சிருக்கேன் வாங்கிக்கோ. “வானா வானா நீ போ…”

சிறுமி சற்று நேரம் நின்று பார்த்தார் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. அமைதியாக அவர்கள் இருக்கையை விட்டு முன் வரிசைக்கு நகர்ந்து “ஏ முத்துமால, முத்துமால கா” என்று உரத்து கூவி விற்றார். அது மூன்று வாயில்கள் கொண்ட பெரிய பெட்டி. ஆனால் வேறு எங்கும் செல்லாமல் அங்கேயே நின்று விற்றார்.

நாம் நம் கவணத்தை ஜன்னல் பாக்கம் திருப்பி வேடிக்கை பார்க்க தொடங்கினோம் (அப்போது ஸ்மாட் போன்கள் இல்லை). ஒரு நிமிடம் கழிந்தது. பெண் அங்கேயே மாலை விற்றுக்கொண்டிருந்தார். இரண்டாவது நிமிடம் முடிவதற்குள் பெண்களில் ஒருவர் அவரை அழைத்து 40 ரூபாய்க்கு பேரத்தை முடித்து, மூன்று மாலைகள் வாங்கினார். 3*40=120 ரூபாய். மாலைகளை இரு மடங்கு விலைக்கு விற்று விட்டார் அந்த பெண். நம்மால் முடிந்தது முகத்தையே கண்களாய் விரித்து அவரை அதிசயத்ததுதான்.

பொதுவாக நரிக்குறவ வியாபாரிகளை மற்ற வியாபாரிகளும், பொது மக்களும் நடத்தும் விதம் மோசமானது. இந்த பெண்கள் தன்மானம் பார்த்தெல்லாம் வியாபாரம் செய்ய முடிவதில்லை. பெரும்பாலும் அவர்கள் கென்சியே பொருள்களை விற்பனை செய்கின்றனர். அல்லது விற்காமல் செல்கின்றனர். இதை பார்க்கும் போது இந்த சிறுமி அசாதாரணமானவர். அவரது கூர்மையான அரிவினால் தான் ஒரு திறமையான வியாபாரி என்று காட்டிவிட்டார். அவரது திறமைக்கு ஏற்ற வாய்ப்பு கிடைத்தால் அவர் வெற்றிகளை மட்டுமே சந்திப்பார்.
நல்ல வேளை நான் மணி வாங்கவில்லை. வாங்கியிருந்தால் அவர் 80 ரூபாய்க்கே விற்றிருப்பார் (பேரத்தில் நாம் அவ்வளவு கெட்டி!).

ரயிலை பயணம் பற்றி அந்த பெண் சொல்லும் போது அமைதியாய் இருந்தது குறித்து ஒரு வருத்தம் இருந்து. ஆனால் இப்போது புரிகிறது, சுய சாதனைகளில் திளைத்திருப்பவர்களால் ரயில் பயணங்களை ஒருபோதும் ரசிக்க முடியாது என்பது.

Tamil Nadu: Production of Unskilled Graduates

Arts and Science colleges in Tamil Nadu follow a marking system that allows the students to be marked throughout the semester.  The students write their end semester exams for 75 marks. The rest of the 25 marks is awarded internally based on three cycle tests (the best out of the three is considered for 10 marks), a seminar (5), and an assignment (5). Another 5 marks is given to their attendance. The system resembles that of CBSCE schools. It records the performance of the students over a period of time. A single bad performance doesn’t cost them dear. And they cannot afford to waste the entire semester and bleed at the end. The system is promising for the students as more number of students can hope to pass despite being moderately talented. All they have to do is work consecutively.

However, the system is not without any flaws. The system relies too much on the memory of the students. Instead of the students requiring to do critical analysis, they just have to memorize just like olden days. It does not teach the students any other valuable skills especially writing. For example the students are not trained to write essays, articles, or research papers. This comes at a great cost for the students when they go in for higher studies and in positions which require them to write a lot. The students are virtually at a loss in producing anything of standard in terms of writing. In this respect, the education that they have received has only failed them at the critical moment of their lives. As a result many of the students do not have the confidence to even apply for posts that would require them to produce good write ups.

This system needs to be changed because at its present form it just aims at passing more students. A good education should prepare the students for their future life; at the least it should produce skilled individuals. However, the education system and examination pattern now does neither. Instead of developing the skills and preparing students for the tough competitive market, it merely gives them good grades to show as if they are skilled. In truth the system does little to bring out the latent talents in the students. The situation is worse in rural areas where the students come from poor backgrounds with the hopes of taking a bite in the growing economy. But this system prepares them only for jobs as old as three generations ago. It is only those who have natural talents or influence that can land in good jobs. The rest end up doing what their parents did or ends up in jobs that pay them very less. So the education system instead of being a leveler is only maintaining the status quo.

பெண் பயணம்

எனக்கென விசேடமாய் செய்ததொரு சிலுவை!

சிப்பாய்கள் புடைசூழ மிக கர்வமாய்

அதை நான் சுமந்துச் செல்கிறேன்.

 

லாயத்தில் சிக்குண்ட குதிரையென‌

மிகநேர் பார்வையுடன், சவுக்கிசை

தாளத்திற்கேர்ப்ப பயணிக்கிறேன்.

 

குருதி குப்பிகளை மேலெறியும்

நட்புமைகள் நிறைந்த தெருக்களில்

வெண்ணிற ஆடையுடுத்தி நடக்கிறேன்.

 

நான்முனை தாக்குதல் கொண்ட

நேர்க்கோட்டு பயணத்தில் துளைக்கும்

தோட்டாக்கள் அனைத்தும் என் தவறே!

 

The Absurdity of the “Dark is Beautiful” Campaign

I

In the Vijay starrer blockbuster Gilli, the hero’s teenage sister comes back home dark and sweating after a failed search mission of Aiswarya Rai and Sachin Tendulkar in the hot sun. Her mother asks her: “Nee ennadi enginukku kari alli potava maari vanthuirukka?” (Why do you look like one who has been feeding coal to the rail engine?)

In a much recent horror movie Kanchana, the hero falls in love with the sister of his highly Brahminical accented Tamil speaking sister-in-law. As the hero tells his sister-in-law of his liking to her sister, she tells him, “Ava unna vida colour da” (She is fairer than you.)

II

In the past few weeks like many others in this country, I too got emails asking me to sign a campaign against Emami India and Sharukh Khan. A visit to the campaign page in Facebook told a lot about the ideas associated with dark skin and the motivations of the group.

In an interview Nandita Das, the celebrity campaigner says, “Do you mean to say that there are no dark colored upper class women?… Especially in mainstream you have to have woman who is fair” (www.desiyup.com ).

And this is precisely why I think the “Dark is Beautiful” campaign is absurd. Most of the entries in the fan page underscored that they have been ostracized for being dark; that they have to work extra hard to prove their worth. And most significantly the campaigners belonged to elite urban backgrounds.

While Nandita Das is campaigning for the acceptance of dark skinned individuals, she is talking within the limitations of an uppercaste/class highly successful woman who was looked upon as dark and dusky despite her beauty and talent.  In the same interview she says that dark should be looked upon as beautiful and not an exception. The inherent flaw in the campaign is the glossing over of discrimination based on caste, class, region, and race as one associated with skin tone.

Take the case of Arpit Jacob for example. Arpit, a native of Kerala, recounts his experience of studying in a school in North India. In the school he was called Kalia (black) and haspi (negro). Because of the ridicule he suffered, he says he joined a college in south India “where there were more dark skinned people.” It is true that Arpit has been the butt of ridicule in school for his skin color. But the real reason for being ridiculed is the fact that he is a southerner and his skin color is different from his northern class mates. It is no wonder that he felt comfortable in a college in south India with like skinned people. Unfortunately in the article, Arpit goes on to generalize on the effects of focusing on negativities in life (darkisbeautiful.blogspot.in ).

Diya Paul, a communication professional recounts her trauma of enduring her paternal grandparents’ mournful “ivvelevu karuppa porenthutaa (she has been born so black!)” and her father’s anguished surprise that his daughter is black despite a “fair like a foreign import or a North Indian” mother. Added to this was the general disbelief in her circle that she could not have born out of her biological mother. She says she even went on to ask her mother if she was adopted or was there a goof-up of babies in the hospital (www.weekendleader.com/ www.Facebook.com/darkisbeautiful). While it is clear that the author’s family and her circle are fair skinned people, we need to ask who the dark skinned ones are.

In the “Dark is Beautiful” fan page in Facebook, there is a vote to trace the origin of skin color bias in India. Out of the four choices – caste system, British influence, Cultural divide between the North Indians and South Indians, and Bollywood – caste system has earned 36+ votes followed by cultural divide between North Indians and South Indians with 27+ votes. Compared to this colonial influence and tinseldom had earned only a negligible 6 and 8 vote.  While the campaigners have indeed realized the factors originating skin color bias and the followers have made it quite evident through their votes, the campaigners have camouflaged caste and regional bias as superficial a bias as skin color.

dark is beautiful

(Courtesy: www.Facebook.com/darkisbeautiful)

The Emami Fair and Handsome advertisement sought to be withdrawn is viewed as spreading the message that one need not work hard when their skin is fair. Well, the truth of the argument is beyond question. But the difference is why is dark skinned detested? Why are dark skinned people looked down upon? Hira Shah, professor of South Asian Studies, York University points out the power and authority associated with the rulers in a colonial set up and the evil doers as dark skinned in many of the Hindu scriptures (http://vimeo.com/16210769 ). In the African- American context, colorism had its origin in the condescending treatment enjoyed by children born out of “slaves and their white masters” (abcnews.go.com ) who naturally had lighter skin. The bottom line of Professor Hira’s analysis is that fairer skin means power, authority, and goodness. In the African-American context it means privilege. Darker skin means the opposite.

The role of media, tinseldom in perpetuating the fair-successful-beautiful-good equation is beyond doubt.  On answering the charges of why Fair and Handsome and why Sharukh Khan, Kavitha Emmanuel – founder Woman of Worth – says that they have to start somewhere (darkisbeautiful.blogspot.in ). She also says that “This is not an attack on brands or brand ambassadors, but on the toxic belief that only fair skin is beautiful” (www.Facebook.com/darkisbeautiful ). And for this reason alone the credibility of the “Dark is Beautiful” campaign as people’s movement is shaky. If the campaigners do not want to rub on the rough side of powerful people, whose conscience are they trying to awaken?  How will brands sell fairness creams without putting forth the idea that fair is better?

In the Indian caste based structural hierarchical society, is it not a fact that the lower you went the darker was the skin? Is it not a fact that people in the south are darker than their northern inhabitants? If you accept dark as beautiful, does it mean that there won’t be discrimination based on these categories?

The hatred for dark skin tone arises out of a sense of shame to resemble someone who you would look down upon and vice versa. The campaigners without addressing the associations of the dark skin are merely saying, “Look we have dark skin, but we are not like them.”

Nandita Das while acknowledging the presence of caste and culture behind the obsession with fair skin thinks that “current causes should be targeted first.” I cannot restrain from asking, when is the right time to talk about caste and culture based color discrimination? It is naïve to assume that caste and culture based bias will be forgotten if dark skin is accepted as beautiful. It won’t be an exaggeration if I say even if the dark skin is accepted as beautiful the question “whose dark skin?” will still remain unanswered.

At the very minimum the campaign does not point out that those who discriminate on skin color are showcasing caste and regional superiority attitude. Without pointing out the reason I am not sure what the campaigners aim to achieve. The campaigners never said, “See, you are being casteist in the guise of color, you are being racist and so on.” Until there is discrimination based on caste, class, region, and race there will be discrimination based on skin color. Even thousands of “Dark is Beautiful” campaigns will not eradicate it.

A campaign which willfully disengages with social realities is only an elitist movement which need not be taken seriously. Unfairly, the Bollywood glam-quotient has earned the campaign undue attention from world over. At its present form the “Dark is Beautiful” campaign is usurping the voices of those dark skinned people who have lesser means of overcoming the bias to prove their talent. As Anjali Rajoria says, the campaign is one that of “highly successful upper caste women who are protesting the loss of few more lucrative mainstream opportunities due to their relatively darker skin tones” (http://www.dalitweb.org/?p=2039 )

References:

http://www.theweekendleader.com/Causes/1678/black-facts.html

http://darkisbeautiful.blogspot.in/2013/08/a-new-operating-system.html

https://www.Facebook.com/darkisbeautiful

http://www.theguardian.com/world/shortcuts/2013/aug/14/indias-dark-obsession-fair-skin

http://abcnews.go.com/2020/GiveMeABreak/story?id=548303&page=1&singlePage=true

http://vimeo.com/16210769

http://darkisbeautiful.blogspot.in/2013/08/by-kavitha-emmanuel-founder-director-of.html

www.desiyup.com

http://www.dalitweb.org/?p=2039

அவிழ்க்கமுடியா கட்டுக்கள்

ஓங்கி வளர்ந்த அந்த (அ)சோக‌ வனத்தில்

கட்டழகு மரங்கள் நீள்லுயர பந்தயத்தில்

ஒன்றை ஒன்று முந்திச் செல்ல

மௌநித்திருக்கிற‌து தரையில் ஒரு பேரொளி!

தனித்தொரு மரமாய் அக்காட்டில்

உதிரத்தின் மென்நாற்றம் வீச

ஒளிப்பிழம்பாய் அகத்தின் இருளுக்கு

இருள் சேர்த்த படி காத்திருக்கிறது…

வட்டமும் சதுரமும் நேர்க்கோடும்

விழிவழியாய் உமிழ்ந்து

சுற்றிருளை பழித்து காத்திருக்கிறது

மிருகத்தின் வரவுக்காய்

விழித்திரைகளின் கட்டுக்குள் நில்லாமல்

விரிந்திருக்கிறது இருள்

உயிர்ப்பிழைப்பின் விதிப்படி

இயங்குகிற‌து கானகம்

மலரந்தம் பருகிய களிவண்டு

உன்னிதழந்தம் பருகி திளைத்த‌தாய்

எண்ணி எடுத்தியம்பிட காத்திருக்கிறது

ஒரு புராதான அக்கினி

கரியது இருளென்றும்

கொடியது வனமென்றும்

மிருகத்தின் வரவுக்காய்

காத்திருக்கிறது பேதமை!

© பூவிளங்கோதை

சுய நேர்மை

ஓர் பேய்மழைக்குப் பின்
சமனற்ற தார்ச்சாலையில்
தேங்கியிருக்கும் நீரில் படிந்த‌
நேர்க்கோபுர பிம்பத்தில்
ஒட்டிக்கொண்ட காகிதம்…

சன்னலுக்கு நேரெதிரே மாட்டப்பட்ட‌
கண்ணாடியில் பிரதிபலித்த‌
எதிர்வீட்டுப் பெண்ணின் இதழ்களை
தொட்டுச் சிலிர்க்கும் நிமிடம்

முகநூலின் பக்கங்களில்
வந்து குவியும் நட்பின்
வேண்டுகோள்கள், பாராட்டுகள்
அதனாலெழும் கர்வம்

அடர்கானகத்தில்
என்னைப்பார் என்னழகைப்பார் என்ற
மோகினியின் பின்சென்று
அவளை புணர்ந்த தருணம்…